Header Logo
SLIC
ஜோதிடம்
வீட்டில் பணம் கொட்ட இது போதும்!

Apr 28, 2025 - 09:54 AM

வீட்டில் பணம் கொட்ட இது போதும்!
Mobitel Inner 1278
EDEX Inner

வீட்டிலுள்ள வறுமை நிலை ஒழிந்து செல்வம் தழைத்தோங்கவும், பொசிட்டிவ் எனர்ஜி வீடெல்லாம் பரவவும், வீட்டின் பூஜை அறை, பணம் சேமிக்கும் இடங்களில் சற்று கவனம் செலுத்த வேண்டும். 

வீட்டின் பணக்கஷ்டம் தீர வேண்டுமானால், மங்களகரமான பொருட்களை நிலையாக வைத்திருந்தாலே, பாதி பிரச்சனையை சமாளிக்க முடியும். இத்துடன் சில எளிய பரிகாரங்களை செய்தால், விரைவில் நன்மைகள் பிறக்கும் என்று பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அந்தவகையில் ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம். 

வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க, நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யக்கூடிய பொருட்களை, தெய்வீக சக்திகளை ஈர்க்கும் பொருட்களை வைத்திருக்க வேண்டும். இதனால், குடும்பம் வறுமையில் இருந்து தப்பித்து, நிரந்தரமான பண வரவையும் பெருக்கலாம். 

இதில் வசம்பு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மண் பானை ஒன்றில் கல் உப்பு நிரப்பி, அதற்குள் ஒரு துண்டு வசம்பு போட்டு, அதற்கு மேலும் கல் உப்பு கொட்டி மூடிவிட வேண்டும். இப்பானையில் 520 என்ற நம்பரை மேல்புறத்திலும், 741 என்று நம்பரை கீழ்புறத்திலும் எழுதி, ஒருவர் கண்ணிலும் படாதவாறு பூஜை அறையிலுள்ள சாமி படங்களுக்கு பின்பக்கமாக மறைத்துவிட வேண்டும். 

ஒவ்வொரு மாதமும் இப்பானையை வெளியே எடுத்து, அதிலுள்ள உப்பு, வசம்பு 2 பொருட்களையும் எடுத்துவிட்டு, வேறு புதிய, கல் உப்பு மாற்றிவிட்டு, மீண்டும் யாருடைய கண்ணிலும் படாமல் வைத்துவிட வேண்டும். இதனால், நிதிச்சிக்கல் தீர்ந்து, பணம் தடையின்றி குடும்பத்துக்குள் வரும் என்பது நம்பிக்கையாகும். 

அதேபோல, வீட்டில் பணம் போட்டு வைக்கும் பணப் பெட்டியை தென்மேற்கு மூலையில் வைத்து, அதன்மீது சிறிது மல்லிப்பூவையும் தூவி வரும்போது பணத்துக்கு பஞ்சம் வராது. அல்லது, பணப்பெட்டி, அலுமாறியில் ஆறு வெற்றிலைகள், மூன்று பாக்கு சேர்த்து வைக்கலாம். அல்லது லவங்கப்பட்டையை அரைத்து தூள் செய்து, பச்சை கலர் துணியில் மடித்து, பச்சை நூலால் கட்டி, பணப்பை அல்லது பர்ஸில் வைத்தாலும் பணம் குறைவின்றி சேர துவங்கும். 

அதேபோல, பணப்பெட்டிக்குள் ஒரு ரூபாய் நாணயத்தையும் போட்டு வைக்கலாம். பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, மாதுளை குச்சி போன்ற லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருளை பீரோவில் வைத்தால் செல்வம் தங்கி நிற்கும். 

பூஜை அறையில், வெள்ளி நாணயம் ஒன்றை வைத்திருக்கலாம். இது குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தி பிடிக்கும். அத்துடன் நேர்மறையான ஆற்றலை வெளியிடும் தன்மை கொண்டது வெள்ளி நாணயங்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. 

எனவே, வெள்ளி நாணயத்தை, பூஜையறையின் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும். ஒருவேளை நாணயத்தை வாங்க வேண்டுமானால், வெள்ளி கிழமை வாங்கலாம். உபயோகிக்கும் முன்பு அந்த நாணயத்தை சுத்தம் செய்து, அதற்கு பிறகே பூஜை அறையில், மேல்நோக்கி வைக்க வேண்டுமாம்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278