Header Logo
SLIC
கிழக்கு
இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் கைது

Apr 29, 2025 - 01:42 PM

இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் கைது
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டு கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சமாக வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இன்று (29) அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று சுற்றிவளைத்து கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர். 

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு கடை ஒன்றை அமைப்பதற்காக கரடியனாறு சுகாதார பிரிவில் கடமையாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் அனுமதி கேட்டுள்ள நிலையில, அவர் அதற்கு இலஞ்சமாக 6,000 ரூபாவை கோரியுள்ளார். 

இதனையடுத்து குறித்த கடடை உரிமையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்கழுவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, அவர்களின் வழிகாட்டலில் சம்பவதினமான இன்று பகல் 12.00 மணியளவில் கரடியனாறு பகுதியில் உள்ள வீதியொன்றில் இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற பொது சுகாதார பரிசோதகர் கடை உரிமையாளரிடம் இலஞ்சமாக 6,000 ரூபாவை வாங்கிய நிலையில் அங்கு மாறுவேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். 

இதில் கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் எனவும், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278