Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
இலங்கையில் பாடசாலை உணவுத் திட்டத்தை வலுப்படுத்துவதற்கு அரிமா கழக சர்வதேச நிதியமும், அமெரிக்க உலக உணவுத் திட்டம் உதவுகின்றன

Apr 29, 2025 - 02:11 PM

இலங்கையில் பாடசாலை உணவுத் திட்டத்தை வலுப்படுத்துவதற்கு அரிமா கழக சர்வதேச நிதியமும், அமெரிக்க உலக உணவுத் திட்டம் உதவுகின்றன
Mobitel Inner 1278

அரிமா கழக சர்வதேச நிதியமானது அமெரிக்க உலக உணவுத் திட்டத்தினூடாக ஒரு மில்லியன் டொலர்களை இலங்கையின் தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவுகின்றன. 

பாடசாலையில் ஊட்டச்சத்து மிக்க உணவினை மாணவர்கள் பெறுவதற்கு உதவும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) இலங்கை அலுவலகத்தின், வீட்டுத் தோட்டம் முதல் வகுப்பறை எனும் பாடசாலை உணவூட்டல் மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசி செயல்திட்டத்திற்கு இந்நிதியுதவியானது ஆதரவளிக்கின்றது. 

இந்த தாராள உதவியின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 100,000 மாணவர்கள் இரும்புச் சத்து மற்றும் / போலிக் அமிலம் நிறைந்த உணவினை பெறுவர். மேலதிகமாக, 2,700 சிறு விவசாயிகளுக்கு விவசாயம், கோழிப் பண்ணை சார்ந்த கருவிகளும், பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இது பாடசாலை உணவுக்கான மூலப்பொருட்களை வழங்குவதற்கு அவர்களை வலுப்படுத்தும். 

'பாடசாலை உணவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம், பலவீனமான உணவு முறைகளை கொண்டுள்ள கட்டமைப்பை மேம்படுத்துவதாக இது உள்ளன' என WFP இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியும் வதிவிடப் பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்திக்கி தெரிவித்தார். 'உணவினைத் தயாரிப்பதற்கு உணவு வழங்குவோர் மற்றும் விவசாயிகளை வலுப்படுத்துவதன் மூலம், வாழ்வாதாரங்களை ஊக்குவிக்கும் மற்றும் பாடசாலை உணவூட்டலின் நிலைத்திருக்கும் தன்மையை பரவலாக்கும் முறைசார் கட்டமைப்பினை நாம் உருவாக்குகின்றோம். நாம் தொடர்ந்து பணியாற்றுவதற்கும் உதவும், அரிமா கழக சர்வதேச நிதியத்தினதும், அமெரிக்காவின் உலக உணவு திட்டத்தின் ஆதரவிற்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்' என அவர் மேலும் குறிப்பிட்டார். 

2020 இல் ஆரம்பிக்கப்பட்ட, WFP இன் வீட்டுத்தோட்டம் முதல் வகுப்பறை நிகழ்ச்சியானது, உணவுத் தயாரிப்புக்கு மற்றும் கோழிப் பண்ணை பராமரிப்புக்குத் தேவையான உணவு விநியோகஸ்தர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு கருவிகள், பயிற்சி மற்றும் ஏனைய மூலங்களை வழங்குகின்றது. தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சி கட்டமைப்புடன் விவசாயிகளை ஒன்றிணைப்பதன் மூலம், அவர்களுக்கு நிரந்தரமான வருமானம் உத்தரவாதப்படுத்துவதுடன், பாடசாலைகளுக்கு தமது உணவுக்கான தூய மூலப் பொருட்களின் தடையற்ற விநியோகமும் உறுதி செய்யப்படுகின்றது. இந்த மாதிரியானது சிறுவர் ஊட்டச்சத்தினை மேம்படுத்த உதவுகின்றது. உள்ளுர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கின்றது. அத்துடன், சமூகங்களை நிதிசார்ந்து மேம்படுத்துகின்றது. 

பெரும்பாலான வறிய குடும்பங்களுக்கு, பாடசாலை உணவூட்டல் என்பது அவர்களுடைய உணவுக்கான செலவீனத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக குறைப்பதற்காக உதவுகின்றது. உணவில் செறிவூட்டப்பட்ட உணவினை உள்ளடக்குவது என்பது, அவர்களது ஊட்டச்சத்து அளவினை பெருமளவில் மேம்படுத்துவதுடன், சிறுவர்களின் அத்தியாவசிய உயிர்ச்சத்துகள் மற்றும் தாதுப்பொருட்களின் நுகர்வினையும் ஊக்குவிக்கின்றது. 

போசாக்கின்மையை அடையாளப்படுத்துவதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு அங்கமாக விவசாய அமைச்சு, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு என்பவற்றின் ஒத்துழைப்புடன் கடந்த 20 வருடங்களாக இலங்கையின் தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சிக்கு WFP ஆதரவளிக்கின்றது. WFP இன் பணிநோக்கிற்காக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் தொழில்கள் மற்றும் தனிநபர்களை அணிதிரட்டும் நிறுவனமான உலக உணவு நிகழ்ச்சித் திட்டம் அமெரிக்கா மற்றும் தமது உலகளாவிய தொணடர்கள் வலையமைப்பினைப் பயன்படுத்தி உதவித் தொகைகள், நிகழ்ச்சிகள் மற்றும் பங்காளித்துவத்தின் ஊடாக மனிதாபிமான சேவையை வலுப்படுத்தும் LCIF என்பனவற்றால் இந்த புதிய திட்டத்திற்கு ஆதரவளிக்கப்படுகின்றது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278