பல்சுவை
கைதானவரின் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச படங்கள்

May 1, 2025 - 03:19 PM -

0

கைதானவரின் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச படங்கள்

இந்தியாவின் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கடநகரை சேர்ந்த தனக்கொடி மகன் முத்துக்குமார் (வயது38). பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.

 

இதே நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வரும் ஒருவரும், முத்துக்குமாரும் நண்பர்கள். இதனால் இரு குடும்பத்தினரும் நெருக்கமாக பழகி வந்தனர்.

 

இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முத்துக்குமார் வீட்டுக்கு, நண்பரின் மனைவி சென்றுள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து முத்துக்குமார் கொடுத்தார். சிறிது நேரத்தில் நண்பரின் மனைவி மயங்கியதும் தனது தொலைபேசியில் அவரை ஆபாசமாக படங்கள் மற்றும் வீடியோவும் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது.

 

இதனை தொடர்ந்து தனது தொலைபேசியில் ஆபாசமாக எடுத்திருந்த போட்டோ மற்றும் வீடியோவை காட்டி அடிக்கடி பணம் கேட்டு நண்பரின் மனைவியை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக பாதிக்கப்பட்டபெண் திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினத்திடம் புகார் செய்தார்.

 

எஸ்.பி உத்தரவின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி விசாரணை நடத்தினார்.

 

விசாரணையில் இதே போல் ஏற்கனவே ஒரு பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டு முத்துக்குமார் மிரட்டி வந்ததும், அவரது தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருந்ததும் தெரியவந்தது.

 

இதனை தொடர்ந்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05