பல்சுவை
கணவனின் தம்பியுடன் சென்ற மனைவி

May 3, 2025 - 12:11 PM -

0

கணவனின் தம்பியுடன் சென்ற மனைவி

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த முகமத்து சாகிர் மற்றும் அர்ஷி தம்பதியின் திருமண வாழ்க்கை பெரும் சர்ச்சையாக வெடித்து, விவாகரத்து வரை சென்றுள்ளது.

 

தாடி, உடலுறவு குறைபாடு குற்றச்சாட்டு, வரதட்சணை தகராறு ஆகியவை இணைந்து இந்த விவகாரத்தை உலகில் அவ்வப்போது நிகழும் வித்தியாசமான சம்பவங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.

 

கடந்த ஏழு மாதங்களுக்கு முன், முகமத்து சாகிர் மற்றும் அர்ஷி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். திருமண புகைப்படங்களில் சாகிர் புதிய வெள்ளை குர்தா மற்றும் பைஜாமாவுடன், தனது பளபளப்பான கருப்பு தாடியை அழகுபடுத்தியிருந்தார்.

 

திருமணமான சில நாட்களிலேயே, அர்ஷி தனது கணவரின் தாடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கினார்.

 

சாகிர், தனது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப தாடியை வைத்திருப்பதாகவும், அதை அகற்ற முடியாது என்றும் மறுத்தார். இந்த சிறிய மாற்றுக் கருத்து, படிப்படியாக பெரும் வாக்குவாதமாக உருவெடுத்தது.

 

அர்ஷிக்கு சாகிரின் தம்பி சபீர் மீது காதல் மலர்ந்துள்ளது. சபீர், தாடி இல்லாமல் இருந்த காரணத்தினால் இது அர்ஷிக்கு பிடித்திருக்கின்றது.

 

இருவருக்கும் இடையே நெருக்கம் வளர்ந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவர்கள் வீட்டை விட்டு ஒன்றாக ஓடிவிட்டனர். இரண்டு மாதங்கள் இந்த பிரச்சனையை குடும்பத்திற்குள் முடித்துக்கொள்ள முயற்சி செய்த சாகிர் மனம் வெறுத்து கடந்த சில தினங்களுக்கு முன் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அவரது புகாரில், தன்னுடைய மனைவி அர்ஷி மற்றும் தம்பி சபீரின் காதலின் போது பேசப்பட்ட விடயங்களை ஆதாரமாகக் காட்டி, அவர்கள் தன்னை விஷம் கலந்து கொலை செய்ய அல்லது கூலிப்படையை ஏவி அழிக்க திட்டமிட்டதாக குற்றம் சாட்டினார்.

 

இதற்கிடையில், அர்ஷி தனது பெற்றோர் வீட்டிற்கு சபீருடன் திரும்பினார். அவர், சாகிருடன் வாழ விருப்பமில்லை என்றும், அவருடைய தம்பி சபீரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

 

மேலும், தாடி வைத்திருப்பது மட்டுமே பிரச்னைக்கு காரணமில்லை என்றும், உடலுறவின் போது தாடி மிகப்பெரிய அசவுகாரியத்தை கொடுக்கிறது என்றாலும் சாகிரால் உடலுறவில் முழுமையாக இயங்க முடியவில்லை. அவருக்கு அந்த விஷயத்தில் உடல் தகுதியின்மை இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு, விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியது.

 

இதனை தொடர்ந்து சாகிர், மனைவி அர்ஷியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார், ஆனால் அர்ஷி தனது பெற்றோரிடமிருந்து வரதட்சணையாக வாங்கிய 5 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கோரினார்.

 

அர்ஷி, குறைந்தபட்சம் பாதி தொகையாவது திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறி, இல்லையெனில் விவாகரத்தை ஏற்க மாட்டேன் என தெரிவித்தார். இந்த பணப் பிரச்னை, தம்பதியருக்கு இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.

 

தற்போது, பொலிஸார் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05