Header Logo
SLIC
கிழக்கு
மட்டக்களப்பில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் நிறைவு

May 5, 2025 - 05:34 PM

மட்டக்களப்பில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் நிறைவு
Mobitel Inner 1278
EDEX Inner

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவு பெற்று இன்று(05) காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேர்தல் நிலையமான மட்டக்களப்பு இந்துக் கல்லூரி பாடசாலையில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டு செல்லப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 455,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 447 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது. 

நாளை காலை 7:00 மணி முதல் 4.00 மணி வரை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த முடியும் என்பதுடன், வாக்குகளை எண்ணுவதற்காக 144 வாக்கெண்ணும் நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் கடமையாற்றுவதற்காக சுமார் 6000 அரச ஊழியர்கள் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அத்தோடு தேர்தல் செயற்பாடுகளுக்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278