Header Logo
SLIC
கிழக்கு
காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி சபைகளை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்

May 7, 2025 - 09:41 PM

காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி சபைகளை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்
Mobitel Inner 1278
EDEX Inner

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் பெரும்பாலான சபைகளில் எவருக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் இருப்பதாகவும் அனைத்து சவால்களை கடந்து தமது அணியினர் காத்தான்குடி நகர சபையில் அனைத்து வட்டாரங்களையும் வெற்றி கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்று ஆட்சியமைக்கவிருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார் 

இன்று (07) அவர் வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளார். 

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் நகர சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைகளில் எவரும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை காணப்படுகிறது. 

இருந்த போதிலும் இவ்விரண்டு சபைகளையும் முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதற்கான அனைத்து வியூகங்களையும் தாம் வகுத்துள்ளதாவும், இந்த இரண்டு சபையும் முஸ்லிம் காங்கிரஸே கைப்பற்றுமெனவும் அதில் எமக்கு எந்த சவாலும் இல்லையெனவும் தெரிவித்தார். 

அதேபோன்று, எமது கட்சிக்கு வாக்களித்த உடன்பிறப்புக்கள் மற்றும் கட்சியின் வெற்றிக்காக அயராதுழைத்த கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், போராளிகள், சமூக ஆர்வலர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278