பல்சுவை
கள்ளக்காதலன் கைது!

May 14, 2025 - 07:29 PM -

0

கள்ளக்காதலன் கைது!

இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜில் பிகர் அலி (வயது 43). இவர் தெலுங்கானா மாநிலம், சந்திராயங் குட்டாவில் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

 

அப்போது அதே பகுதியை சேர்ந்த பெண் கட்டிட தொழிலாளியான கேதாவாத் புஜ்ஜி என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

 

இந்த நிலையில் பெண் தொழிலாளி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஜில் பிகர் அலியிடம் வற்புறுத்தினார்.

 

ஜில் பிகர் அலிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளதால் திருமணம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார்.

 

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜில்பிகர் அலி கள்ள உறவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

 

பின்னர் அவரது உடலை படுக்கையில் போட்டு தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றார். வீட்டில் இருந்து புகை வந்ததால் அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து கேதாவாத் புஜ்ஜி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜில் பிகர் அலியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05