பல்சுவை
அசைவ உணவு சாப்பிட்ட நபர் உயிரிழப்பு

May 15, 2025 - 06:51 PM -

0

அசைவ உணவு சாப்பிட்ட நபர் உயிரிழப்பு

இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்டம் குருங்கலூர் வேளாணி கிராமத்தில், பிறந்தநாள் விழாவில் அசைவம் சாப்பிட்டவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சத்யராஜ் என்பவரது மகனின் முதல் பிறந்தநாள் விழாவை ஒட்டி அசைவ உணவு பரிமாறப்பட்டது.

 

பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 50 இற்கும் மேற்பட்டோர் அசைவ விருந்தை சாப்பிட்ட நிலையில், 30 இற்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

 

கருப்பையா என்ற 60 வயது நபர் சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

 

30 இற்கும் மேற்பட்டோர் ஏம்பல் அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலருக்கு சிவகங்கை மாவட்டம் சூரக்குடி அரசு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05