பல்சுவை
இன்றைய நிலவரம் என்ன?

May 21, 2025 - 12:45 PM -

0

இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் நகை என்பதை நினைத்து பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 

மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

 

அந்த வகையில் கடந்த வாரம் தங்கம் விலை 70,000 ரூபாவிற்கும் கீழ் குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 

அந்த வகையில், நேற்று (20) தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,710க்கும், சவரனுக்கு ரூ. 360உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.69,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இந்த நிலையில், இன்று (21) தங்கம் அதிரடியாக கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,930க்கும், சவரனுக்கு ரூ. 1,760 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 220 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,360க்கும், சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 58,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளியும் அதிரடியாக கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05