பல்சுவை
மைசூர் பாகின் பெயரை மாற்றியதால் சர்ச்சை!

May 23, 2025 - 04:13 PM -

0

மைசூர் பாகின் பெயரை மாற்றியதால் சர்ச்சை!

பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை இந்திய மக்களிடம் தேசிய உணர்வை கிளர்த்தியுள்ளது. இதன் விளைவாக பாகிஸ்தான் மீதான மக்களின் கோபம் பல்வேறு வகையில் வெளிப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடை உரிமையாளர்கள், பாரம்பரிய இந்திய இனிப்புப் பெயர்களில் இருந்து "பாக்" என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்துள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக, மோதி பாக், ஆம் பாக், கோண்ட் பாக் மற்றும் மைசூர் பாக் போன்ற இனிப்புகள் மோதி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோண்ட் ஸ்ரீ மற்றும் மைசூர் ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளன. 

அதவாது, "பாக்" என்ற பின்னொட்டு "ஸ்ரீ" என்று மாற்றப்பட்டுள்ளன. ஆனால் இது தேவையற்றது என பல நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். 

ஒரு பயனர், "பக்கோடாவை ஸ்ரீ-ஓடா என்று மாற்றுவீர்களா?" என வினவியுள்ளார். மற்றொரு பயனர், "பாக்" என்ற வார்த்தை கன்னட வார்த்தையான "paaka" என்பதிலிருந்து வந்தது என்று தெரிவித்தார். 

இதன் பொருள் "இனிப்பு சுவையூட்டி ". இது இந்தி வார்த்தையான "paag" மற்றும் சமஸ்கிருத வார்த்தையான "pagva" ஆகியவற்றுடன் வேர்களைப் பகிர்ந்து கொள்கிறது என்று அந்த பயனர் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05