பல்சுவை
50 இளம் பெண்களை சீரழித்த சாரதி!

May 23, 2025 - 05:18 PM -

0

50 இளம் பெண்களை சீரழித்த சாரதி!

ஜப்பானில் 54 வயதான கார் சாரதி ஒருவர் போதைபொருட்கள் கொடுத்து 50 இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த ஆண்டு இவரது காரில் டோக்கியோவை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். அப்போது அவரிடம் நைசாக பேச்சுகொடுத்தார். 

பின்னர் இரட்டை அர்த்தத்தில் பேசி அந்த பெண்ணிற்கு காரின் சாரதி தூக்க மாத்திரையுடன் போதைப்பொருளையும் கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த பெண் சுயநினைவு இழந்தார். 

உடனே அவர் அந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை அவர் கைடயக்க தொலைபேசியில் வீடியோ எடுத்தார். 

இதேபோல அவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பல பெண்களுக்கு இதேபோன்று இரட்டை அர்த்தத்தில் பேசி, போதை பொருட்கள் கொடுத்து அவர்கள் கற்பை சூறையாடியது தெரிய வந்துள்ளது. 

வீடு மட்டுமல்லாது தனது காரில் வைத்தும் பல பெண்களை அவர் சீரழித்து உள்ள விவரம் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையெல்லாம் அவர் வீடியோவாக எடுத்துள்ளார். 

மொத்தம் 50 இளம்பெண்கள் இந்த சாரதியின் வலையில் இவ்வாறு சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

பொலிஸார் சாரியின் கைடயக்க தொலைபேசி மற்றும் மடிக்கணனி கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனால் குறித்த சாரதி ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒரு பெண்ணுக்கு அவர் போதைபொருள் கொடுத்து 23 ஆயிரம் கொள்ளையடித்ததற்காக அவரை கைது செய்து இருந்தனர். 

பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து டிசம்பர் மாதம் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட பின்னர் தான் இந்த சாரதியின் இந்த மோசமான செயல் வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05