May 24, 2025 - 12:24 PM
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்த வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு கைது செய்துள்ளனர்.
இதுபற்றி தெரியவருவதாவது, குறித்த பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி கற்றுவரும் சிங்கள மாணவர்களுக்கிடையே புதிதாக பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்துவது தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாத்தின் போது மாணவி ஒருவர் பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த மாணவியின் கன்னத்தில் சக மாணவன் ஒருவர் அறைந்து தாக்கியதில், அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சக மாணவனை நேற்று இரவு பொலிஸார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

































