Header Logo
SLIC
கிழக்கு
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு

May 26, 2025 - 04:34 PM

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

திருகோணமலை, கிண்ணியாவில் இருந்து மட்டக்களப்பு, ஓட்டுமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி - பதுரியா நகர், ஆலையடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் மற்றும் ஓட்டமாவடி, சூடுபத்தினசேனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஓட்டுமாவடியைச் சோந்த 6 நண்பர்கள் 3 மோட்டார் சைக்கிளில் சம்பவதினமான நேற்று இரவு கிண்ணியாவில் இருந்து ஓட்டமாவடி பகுதியை நோக்கி பயணித்த போது வாகரை பனிச்சங்கேணி பாலத்தில் வேககட்டுப்பாட்டை மீறி பாலத்துடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் வாகரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278