Header Logo

பல்சுவை
பலருக்கு புற்றுநோய் பாதிப்பு!

May 26, 2025 - 06:54 PM -

0

பலருக்கு புற்றுநோய் பாதிப்பு!

ஐரோப்பா முழுவதும் 67 குழந்தைகளை கருத்தரிக்க அரிய புற்றுநோய் அபாயம் உள்ள ஒரு ஆணின் விந்தணு பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

அவரின் விந்தணுவில் கருத்தரித்த குழந்தைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

எட்டு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 46 குடும்பங்களைச் சேர்ந்த 67 குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டனர். இந்த மாறுபாடு 23 குழந்தைகளில் கண்டறியப்பட்டது. அவர்களில் 10 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் கேன்சர் செல்களான லுகேமியா மற்றும் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா பாதிப்புகளும் அடங்கும்.

 

இரண்டு குடும்பங்கள் தங்கள் குழந்தைகளில் புற்றுநோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்ட பிறகு, தங்கள் கருவுறுதல் வைத்தியசாலைக்கு தொடர்பு கொண்டபோது இது வெளிச்சத்துக்கு வந்தது.

 

2008 ஆம் ஆண்டு விந்தணு தானத்தின் போது இந்த பிறழ்வு நிகழ்ந்தது. 'நன்கொடை அளிக்கப்பட்டபோது இந்த அரிய மாறுபாடு புற்றுநோயுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை.

 

மேலும் நிலையான ஸ்கிரீனிங் நுட்பங்களைப் பயன்படுத்தி அதைக் கண்டறிந்திருக்க முடியாது.

 

ஆனால் தானம் செய்தவரின் விந்தணுக்களில் சிலவற்றில் TP53 எனப்படும் மரபணு மாறுபாடு உள்ளது' என விந்தணுவை வழங்கிய ஐரோப்பிய விந்து வங்கி உறுதிப்படுத்தியது.

 

ஒரு டோனாரின் விந்தணுவை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளை உருவாக்க மட்டும் பயனப்டுத்த வேண்டும் என்ற விந்து வங்கியின் விதி மீறப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

 

இதற்கிடையே பாதிக்கப்பட்ட டோனாரின் விந்தணுக்களைப் பெற்ற அனைத்து மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

TP53 மாறுபாட்டைக் கொண்ட குழந்தைகள் தீவிரமான, நீண்டகால மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

சாய்ந்தமருதில் மூழ்கிய பாரிய மீன்பிடிப் படகு!

சாய்ந்தமருதில் மூழ்கிய பாரிய மீன்பிடிப் படகு!

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

title