Header Logo
SLIC
கிழக்கு
மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் மகளிர் அணி செயலாளர் ராஜினாமா

May 27, 2025 - 04:47 PM

மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் மகளிர் அணி செயலாளர் ராஜினாமா
Mobitel Inner 1278
EDEX Inner


ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருள்ராஜ் ஜெயகாந்தன் மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரவீந்திரநாதன் கண்ணகி ஆகிய இருவரும் கட்சியில் இருந்து இன்று (27) ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்தனர்.

 

மட்டக்களப்பு இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது குறித்த ராஜினாமா தொடர்பாக அறிவிப்பு விடுத்துள்ளனர்.

 

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருள்ராஜ் ஜெயகாந்தன் தெரிவிக்கையில்,

 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கடந்த 5 வருடங்களாக கட்சிக்காக செயற்பட்டதுடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு கட்சி சார்பில் போட்டியிட்டோம். இதன்போது போனஸ் ஆசனமாக இரண்டு ஆசனம் கிடைத்தது.

 

இந்த இரண்டு ஆசனங்களை மட்டக்களப்பு நகரில் ஒருவருக்கும் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் முஸ்லிம் பெண் ஒருவருக்கும் இந்த ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே கட்சிக்காக உழைத்த பலர் இருக்கின்ற நிலையில் ஒரு வருடத்துக்கு ஒருவர் என மாற்றி ஆசன ஒதுக்கீட்டை செய்யுமாறு கட்சியிடம் கோரினோம் கட்சி அதை செவிமடுக்கவில்லை.

 

இந்த நிலையில் மாநகர சபை தேர்தலில் 98 வீதம் தமிழ் வாக்குகளை பெற்று கொடுத்த நிலையில் எங்களுக்காக அளிக்கப்பட்ட வாக்குகளை கொண்டு முஸ்லிம் பெண் ஒருவருக்கு போனஸ் ஆசனம் வழங்குவதை வாக்களித்த தமிழ் மக்கள் மிக கேவலமாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

எனவே இது தொடர்பாக கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்தோம் ஆனால் அவர்கள் அதற்கான தீர்வை தரவில்லை எனவே இவ்வாறு தீர்வை வழங்காத நிலையில் கட்சியில் இருந்து நானும் மகளிர் அணி செயலாளரும் ராஜினாமா செய்வதாக தீர்மானம் எடுத்து ராஜினாமா கடிதத்தை கட்சிக்கு அனுப்பியுள்ளோம் என தெரிவித்தார்.

 

 

 


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278