Header Logo
SLIC
கிழக்கு
மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பாதயாத்திரை...

May 29, 2025 - 12:01 PM

மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பாதயாத்திரை...
Mobitel Inner 1278
EDEX Inner

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரையானது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தினை நேற்று (28) மாலை சென்றடைந்தது. 

மே மாதம் 1 ஆம் திகதி தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தலைமையில் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது. 

வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொணராகலை ஆகிய 7 மாவட்டங்களையும் இணைத்து, 55 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இந்த புனித பாதயாத்திரை இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றது. 

நேற்று மாலை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்த பாதயாத்திரை குழுவினர் அங்கு தங்கியிருந்து இன்று காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டு பாதயாத்திரையினை ஆரம்பித்தனர். 

எதிர்வரும் 20 ஆம் திகதி உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருந்து யால காட்டுவழிப்பாதை திறக்கப்படும் போது அதன் ஊடாக பயணித்து 25 ஆம் திகதி கதிர்காம கந்தன் ஆலயத்தினை சென்றடையவுள்ளதாக சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தெரிவித்தார். 

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278