பல்சுவை
வேறொருவருடன் நிச்சயம்!

May 29, 2025 - 05:32 PM -

0

வேறொருவருடன் நிச்சயம்!

காதலி வீட்டின் அருகே காதலன் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவின் கேரளா, கொல்லம் பாருப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெயின். இவரது மகன் ஜிதின். 

 

இவர் தனது தாத்தாவை சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

 

அப்போது அங்கு ல் நர்சிங் மூன்றாம் ஆண்டு படிக்கும், கன்னியாகுமரி, புத்தன்சந்தையை சேர்ந்த மாணவியுடன் ஜிதினுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

 

இந்நிலையில், ஜிதின் தனது காதலி வீட்டிற்கு வந்து பெண் கேட்டுள்ளார். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

 

இதனை அறிந்த ஜிதின் மன அழுத்தத்தில் காதலியின் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காதலி, குளியலறையில் இருந்து விஷ மருந்தை குடித்தார்.

 

உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Comments
0

MOST READ
01
02
03
04
05