பல்சுவை
சுற்றுலா பயணிகளின் ஜீப்பை கவிழ்க்க முயன்ற காண்டாமிருகம்!

May 30, 2025 - 03:17 PM -

0

சுற்றுலா பயணிகளின் ஜீப்பை கவிழ்க்க முயன்ற காண்டாமிருகம்!

இந்தியாவில் - அசாம் மாநிலம் மனாஸ் தேசிய பூங்காவில் நேற்று (29) ஒரு காண்டாமிருகம் ஒன்று சுற்றுலாப் பயணிகள் சென்ற சஃபாரி ஜீப்பை முட்டி மோதிய சம்பவம் நிகழ்ந்தது. 

தேசிய பூங்காவின் சல்பாரி மலைத்தொடரில் நடந்த இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த காணொளியில், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஜீப்பை நோக்கி காண்டாமிருகம் நடந்து செல்வதைக் காட்டுகிறது. 

காண்டாமிருகம் பல முறை வாகனத்தைக் கவிழ்க்க முயன்றது. பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்றது. 

ஜீப்பில் இருந்த அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05