பல்சுவை
இனி மினிமம் பேலன்ஸ் தேவையில்லை

Jun 1, 2025 - 01:52 PM -

0

இனி மினிமம் பேலன்ஸ் தேவையில்லை

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான கனரா, சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது.

 

சேமிப்புப் கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை கனரா வங்கி ரத்து செய்தது.

 

இன்று (01) முதல் இது நடைமுறைக்கு வருவதாக கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு முன்பு கனரா வங்கியின் நகர கிளைகளில் ரூ.2,000, சிறுநகர கிளைகளில் ரூ.1,000 மற்றும் கிராம கிளைகளில் ரூ.500 என்ற குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியிருந்தது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க இல்லையெனில் ரூ.25 முதல் ரூ.45 வரை அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05