Header Logo

பல்சுவை
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

Jun 3, 2025 - 10:33 AM -

0

கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் தனல்லூரைச் சேர்ந்தவர்கள் செம்பன் இசக்கி - சைனபா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி கைருன்னிசா உள்ளார். இவரது கணவர் அதே ஊரில் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை தனது கணவர் மற்றும் மகள் கைருன்னிசா உடன் பேசிக்கொண்டிருந்த போது சைனபா டீ போட்டி எடுத்து வந்துள்ளார். அப்போது டீ குடிக்கும்போது கப் கேக் சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென கப் கேக் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறில் ஏற்பட்டுள்ளது.

 

கேரளாவில் கப்கேக் சாப்பிட்ட பெண்

 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மலப்புரத்தில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைகாக அழைத்து சென்றுள்ளனர். அங்கு சைனபாவை அல்டா ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்துள்ளனர்.

 

அப்போது கப் கேக்கின் தூண்டு ஒன்று தொண்டை பகுதியில் சிக்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். தொடர்ந்து சைனபாவின் உடல்நிலை மோசமடைந்தது. குறிப்பாக அவரின் உடலில் ஆக்ஸிஜன் நிலை குறைந்ததால் மயக்க நிலைக்கு சென்றார்.

 

சுவாசப்பாதையில் சிக்கிய கேக்,

 

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக வேறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல தனியார் வைத்தியசாலையில் வைத்தியர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைக்கு அழைத்துசென்றனர். அங்கு மருத்துவ முயற்சிகள் இருந்தபோதிலும், சைனபாவை காப்பாற்ற முடியவில்லை. இதனால் சைனபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

இது குறித்து வைத்தியர்கள் தெரிவிக்கையில்,

 

சைனபா எங்களது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படும் நேரத்தில் அவரது தொண்டையில் உள்ள காற்றுப்பாதை கடுமையாகத் தடைபட்டது. மேலும் அவர் ஏற்கனவே சுவாசக் கோளாறில் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளார். மேலும் எங்கள் குழு அவசர சிகிச்சைகளைச் செய்தது, ஆனால் அவரது ஆக்ஸிஜன் செறிவு மிகவும் மோசமான நிலைக்குக் குறைந்துவிட்டது என்று அவர் மேலும் கூறினார்.

 

மேலும், வைத்தியசாலையின் மூத்த நுரையீரல் நிபுணர் ஒருவர் கூறுகையில், 'உணவுத் துகள்கள் சுவாசப்பாதையை முற்றிலுமாகத் தடுத்தால் அது உயிருக்கு ஆபத்தானது. சரியான நேரத்தில் அகற்றுதல் மற்றும் ஆக்ஸிஜன் ஆதரவு மிக முக்கியம், ஆனால் சில நொடிகள் காலத்தாமதம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக கூறினார்.

 

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு,

 

மேலும் எந்த உணவாக இருந்தாலும் அதனை நன்கு அசைத்து சாப்பிட வேண்டும் என்றும்,பொருள்களின் தரத்தை பார்த்து உட்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினர்.இதனைதொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சைனபா உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

title