Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
புத்தளத்தில் 1,121 பேர் பாதிப்பு

Jun 3, 2025 - 11:16 AM

புத்தளத்தில் 1,121 பேர் பாதிப்பு
Mobitel Inner 1278

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் நேற்று (02) வரை 325 குடும்பங்களைச் சேர்ந்த 1,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

புத்தளம் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவில் 120 கிராம சேவகர் பிரிவுகளில் 325 குடும்பங்களைச் சேர்ந்த 1,121 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மஹாகும்புக்கடவல பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

 

இங்கு 18 கிராம சேவகர் பிரிவில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும், சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவில் 9 கிராம சேவகர் பிரிவில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவில் 9 கிராம சேவகர் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேரும், தங்கொட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் 12 கிராம சேவகர் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் 12 கிராம சேவகர் பிரிவில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 166 பேரும், மஹாவௌ பிரதேச செயலாளர் பிரிவில் 3 கிராம சேவகர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும், வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவில் 10 கிராம சேவகர் பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேரும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவில் 6 கிராம சேவகர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேரும், பல்லம பிரதேச செயலாளர் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அத்துடன், நவகத்தேகம பிரதேச செயலாளர் பிரிவில் 4 கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவில் 24 கிராம சேவகர் பிரிவில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 230 பேரும், வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் 2 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 07 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை, கடும் மழை மற்றும் கடும் காற்று காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 321 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 9 வியாபார நிலையங்களும், 6 பொதுக்கட்டடங்களும் சேததடைந்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி கூறினார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278