Jun 11, 2025 - 03:11 PM -
0
இந்தியாவில் அரசுப் பாடசாலைகளுக்கான வேலை நாட்களை அதிகப்படுத்தி அரசு புதிய நாட்காட்டியை வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு ஆசியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உயர்நிலைப் பாடசாலைகளுக்கான நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்து இந்திய பொதுக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது வரை பாடசாலைகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில், இனி காலை 9.45 மணி முதல் மாலை 4.15 மணி வரை பாடசாலைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மதியம் 15 நிமிடங்கள் வீதம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
220 வேலை நாட்கள் வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த கேரளா அரசு இந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமை கூடுதல் வேலை நாளாக இருக்காது.
ஆரம்ப பாடசாலைகளில் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் வாரத்தில் வராத இரண்டு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்கும். உயர்நிலைப் பள்ளிகளில் 6 சனிக்கிழமைகளும் வேலை நாட்களாகும்.
25 சனிக்கிழமைகள் உட்பட 220 பாடசாலை நாட்கள் கொண்டதாக புதிய கல்வி நாட்காட்டி உள்ளது. கடந்த ஆண்டை விட 16 சனிக்கிழமைகள் கூடுதலாக இந்த ஆண்டு வேலை நாட்களாக உள்ளன. புதிய கல்வி நாட்காட்டிக்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கல்விச் சட்டத்தைப் பரிசீலிக்காமல் புதிய நாட்காட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதிய கல்வி நாட்காட்டி தேசிய கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்றும் ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.