பல்சுவை
மாணவிக்கு இடம்பெற்ற கொடூரம்

Jun 12, 2025 - 11:51 AM -

0

மாணவிக்கு இடம்பெற்ற கொடூரம்

இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தக் கொடூரத்தில் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் மற்றும் 22 வயது இளைஞர் அஜய் ஆகியோர் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு மாணவனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

 

காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள அரசுப் பாடசாலையில் பயிலும் மாணவி,

 

களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் மகள். குற்றவாளிகள், மாணவிக்கு மதுபானம் கலந்த குளிர்பானம் கொடுத்து, மயக்க நிலையில் களக்காட்டூர் வங்கி பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

 

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மாணவியை விட வயதில் இளையவர்கள். புகாரின் பேரில் மாநகர காவல்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டு, இரு சிறுவர்கள் மற்றும் அஜய்யை கைது செய்தது. ஆனால், மாணவி இதில், அஜய்க்கு தொடர்பு இல்லை என சொன்னதை கேட்டு அதிர்ந்து போன பொலிஸார் அவரை விடுவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

18 வயதுக்குக் குறைவான குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

 

செய்யப்பட்டுள்ளது. மாணவிக்கு மருத்துவ பரிசோதனையும் உளவியல் ஆதரவும் வழங்கப்படுகிறது.

இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து, கடும் நடவடிக்கை கோரியுள்ளனர். 'இளைஞர்களின் ஒழுக்க சீர்கேடு கவலை அளிக்கிறது,' என ஒரு பயனர் பதிவிட்டார்.

 

பாடசாலைகளில் பாலியல் கல்வி, விழிப்புணர்வு தேவை என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க அரசு, பாடசாலைகளில் பெற்றோர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. வழக்கு விசாரணை தொடர்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05