Jun 18, 2025 - 07:54 AM -
0
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து விமான பயணத்தின் மீதான நம்பகத்தன்மையில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். குறிப்பிக்க இந்தியர்கள் ஒருவித தயக்கத்துடன் விமான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். என்னதான் அனுபவமுள்ள விமான ஓட்டியாக இருந்தாலும் விமானத்தில் ஏற்படும் இயந்திரக்கோளாறை சரிசெய்வது மிகவும் கடினம். அதேபோல் ஒவ்வொரு விமானியின் அனுபவத்தை விமானம் தரையிறக்குவதில் தெரிந்துகொள்ளலாம் என்று சொல்வார்கள்.
காரணம், ஓடுபாதையில் எவ்வித சிக்கல்கள் இருந்தாலும் சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கும் திறமை அனுபவம் மூலமாகவே கிடைக்கும். அதேபோல் குறுகிய ஓடுபாதைகள் விமானிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். தவறுகளுக்கு இடமில்லாமல் விமானத்தை டேக்ஆப், லேண்டிங் செய்யவேண்டும், கொஞ்சம் கவனம் சிதறினாலும் மரணம் நிச்சயம். அந்த வகையில் விமானிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் சவாலான 10 குறுகிய ரன்வே எவை? எங்கு உள்ளது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகின் மிக குறுகிய ஓடுபாதைகளின் டாப் 5 லிஸ்டில் 5ம்இடத்தில் ஷிம்லா விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதை உள்ளது. இதன் நீளம் 1,230 மீட்டர் (4,035 அடி) ஆகும். ஒவ்வொரு டேக்ஆப் மற்றும் லேண்டிங் போது பயணிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும்.
உலகின் மிக குறுகிய ஓடுபாதைகளின் டாப் 5 லிஸ்டில் 4ம் இடத்தில் நேபாளத்தில் உள்ள டென்சிங்-ஹிலாரி விமான நிலைய ஓடுபாதை உள்ளது. இதன் நீளம் 600 மீட்டர் (1,969 அடி) ஆகும்.
இந்த லிஸ்டில் 3ம் இடத்தில் பிரான்ஸ் நாட்டில் உள்ள கோர்செவெல் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதை உள்ளது. மிக குறுகிய நீளம் கொண்ட இந்த ஓடுபாதையின் நீளம் 537 மீட்டர் (1,762 அடி) ஆகும்.
இந்த லிஸ்டில் 2ம் இடத்தில் கரீபியன் தீவில் உள்ள Juancho E. Yrausquin விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதை இடம் பிடித்துள்ளது. மிக குறுகிய நீளம் கொண்ட இந்த ஓடுபாதையின் நீளம் 400 மீட்டர் (1,312 அடி) ஆகும்.