Jun 18, 2025 - 08:21 AM -
0
விண்கற்களால் அவ்வளவு பெரிய டைனோர்சர்களே அழிந்து போனது. நாமெல்லாம் எம்மாத்திரம்? அப்படி ஒரு விண்கல்தான் சமீபத்தில் பூமியை நோக்கி வந்தது. ஆனால், இது பூமியை தாக்காது என்று கூறிய விஞ்ஞானிகள், நிலவை தாக்குவதற்கான வாய்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாக கூறியுள்ளனர். இது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த விண்கல்லின் பெயர் '2024 YR4'. 'சிட்டி கில்லர்' என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த விண்கல், கடந்த ஆண்டு இறுதியில்தான் நம் கண்ணில் சிக்கியது. ஆனால் சிக்கிய நேரம் சரியில்லை. அதாவது இது குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, சூரியனை நோக்கி வரும். திரும்பி போகும்போது பூமிக்கு நெருக்கமாக செல்லும். அப்படி போகும்போதுதான் நம் கண்ணில் சிக்கியது. எனவே இதனை சரியாக பார்க்க முடியவில்லை.
சிட்டி கில்லர்
ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். அதாவது, இக்கல் நிச்சயம் பூமியையோ அல்லது நிலவையோ தாக்கும். எனவே இருக்கிற எல்லா தொலைநோக்கிகளையும் இக்கல் பக்கமாக திருப்பி ஆய்வை தீவிரப்படுத்தினர். இதில் ஒரு ஆறுதலான செய்தி கிடைத்தது. அதாவது, விண்கல் இப்போதைக்கு பூமியை தாக்காது என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தலைக்கு வந்தது தலைபாகையோடு போனது என்கிற கதையாது, பூமியை தாக்க வந்தது, தற்போது நிலவை தாக்கும் என்று தெரிய வந்திருக்கிறது.
விஞ்ஞானிகள் ஆய்வு
'சிட்டி கில்லர்' ஒன்றும் அவ்வளவு பெருசு கிடையாது. எனவே பெரிய பாதிப்பை ஏற்படுத்ததாது. ஆனால், நாளை பின்னே இதே போன்ற ஒரு கல் பூமியை தாக்காது என்பது என்ன நிச்சயம்? இதற்கான அலாரம்தான் இந்த 'சிட்டி கில்லர்'. எனவே, இக்கல் எப்படி நிலவை தாக்குகிறது? நிலவில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பதை பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.
ஆய்வில் தெரிய வந்த 2 விஷயங்கள்
இந்த ஆய்வின்போது அவர்கள் இரண்டு விஷயங்களை கண்டுபிடித்தனர். ஒன்று, 'சிட்டி கில்லர்' பயணிக்கும் பாதை கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கிறது. எனவே, நிலவை தாக்கவதற்கு வாய்ப்பு இல்லை என்று கணித்தனர். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, இக்கல் நிச்சியம் நிலவை தாக்கும் என்று உறுதி செய்தனர்.
மனித குலத்திற்கு அச்சுறுத்தலா?
இப்போ என்னதான் சொல்ல வரீங்க? நிலவை தாக்குமா? தாக்கதா? என்று பொதுமக்கள் சோஷியல் மீடியாக்களில் கேள்வி எழுப்ப, நடு மண்டையை சொரிந்துக்கொண்டே.. 3% வாய்ப்பு இருக்கு என்று விஞ்ஞானிகள் கூறினர். இப்போது இந்த வாய்ப்பு 4.3% ஆக அதிகரித்திருக்கிறது என்பதுதான் அந்த இரண்டாவது விஷயம். ஆனால் இந்த கல் தாக்குதவதால் பூமிக்கோ, மனிதர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்பாடு என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அடுத்த ரவுண்டுக்கு ரெடி
2028ம் ஆண்டு மீண்டும் 'சிட்டி கில்லர்' சூரியனை நோக்கி வரும். அப்படி வரும்போது இதை பற்றி இன்னும் அதிகம் தெரிந்துக்கொள்ள முடியும். 2032ம் ஆண்டு இக்கல் நிலவை தாக்கும். சுமார் 10 மாடி கட்டிடத்தின் சைஸ் கொண்ட இந்த 'சிட்டி கில்லர்' நமக்கான எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. இதனை உணர்ந்து, இனி வரும் காலங்களில் விண்வெளி துறைக்கு அதிக பணத்தை செலவு செய்து, நம்மை சுற்றியுள்ள ஆபத்துக்கள் என்ன? என்பதை தெரிந்தக்கொள்ள வேண்டும்.
காலை வாரிய அமெரிக்கா
டிவிஸ்ட் என்னவெனில் விண்வெளி துறையில் பல முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டிருந்த நாசாவுக்கு, அமெரிக்க அரசு இந்த ஆண்டு பாதி நிதியை வெட்ட இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நாசா தனது தேவைககள் என்ன என்பதையும், அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் அமெரிக்க அரசிடம் கொடுக்கும். அந்த அரசு, வேண்டிய நிதியை ஒதுக்கும். இந்த ஆண்டு தேவையான நிதியில் பாதியை மட்டுமே ஒதுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படியெல்லாம் பண்ணா.. பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விண்கல்லை எப்படி கண்டுபிடிக்க முடியும்? அப்போ ஹாலிவுட் படங்களில் மட்டும்தான் அமெரிக்கா ஹீரோவாக இருக்கிறதா? யதார்த்த வாழ்க்கையில் அமெரிக்கா ஓட்டை குடமா? என்று பலரும் கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.