Header Logo
Mogo Academy

கிழக்கு
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Jun 18, 2025 - 11:41 AM -

0

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
Mobitel inner

ஆற்றோரத்தில் நீண்ட காலமாக   இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் மீட்கப்பட்டுள்ளது.

 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  மல்வத்தை பகுதியில் நேற்று (17) கசிப்பு உற்பத்தி தொடர்பில் ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதன் போது கசிப்பு உற்பத்திற்கான 200 லீற்றர், 2 இரும்பு பரள், செப்பு குழாய், 1 கேஸ் அடுப்பு, 4 அடி நீளமுடைய ரப்பர் குழாய் உள்ளிட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.மேலும் இக்கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

 

குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதுடன் சான்றுப்பொருட்கள் யாவும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிநடத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான அணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara