Jun 19, 2025 - 03:46 PM -
0
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியைச் சேர்ந்தவர் ராம் கிலாவன். இவர் தனது 25 வயதுடைய மனைவியுடன் சொந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் ராம் கிலாவனின் மனைவிக்கு அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவனுக்குத் தெரியாமல் கள்ளக்காதலனுடன் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.
இதை அறிந்து கொண்ட ராம் கிலாவன் ஒரு நாள் கள்ளக்காதலன் வீட்டிற்குச் சென்ற தனது மனைவியை பின்தொடர்ந்து சென்றார். அங்கு கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த தன் மனைவியை கையும் களவுமாக பிடித்தார்.
அப்போது அங்கே 3 பேருக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனதில் ராம் கிலாவன் அவரது மனைவியின் மூக்கை கடித்து துப்பினார். மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது.
காயம் அடைந்த அந்தப்பெண் வீறிட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் சம்பவம் நடந்த அந்த வீட்டை சூழ்ந்து கொண்டனர். மூக்கிலிருந்து ரத்தம் நிறைய வழிவதைப் பார்த்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஹரியவான் பொலிஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ராம் கிலாவன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.