Header Logo

பல்சுவை
இளைஞரின் பேச்சில் மயங்கிய பெண் வைத்தியர் - பின்னர் நடந்துள்ள விபரீதம்

Jun 22, 2025 - 10:52 AM -

0

இளைஞரின் பேச்சில் மயங்கிய பெண் வைத்தியர் - பின்னர் நடந்துள்ள விபரீதம்

டேட்டிங் செயலியில் அறிமுகமான இளைஞருடன் பழகிய பெண் வைத்தியர் கர்ப்பம் அடைந்த நிலையில், தன்னை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாக அந்த இளைஞர் மீது அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

மும்பையை சேர்ந்த 28 வயது இளம்பெண் அந்தேரியில் உள்ள வைத்தியசாலையில் பணியாற்றி வருகிறார். 

கடந்த 2023-ம் ஆண்டு அவருக்கு ஒன்லைன் டேட்டிங் செயலி மூலம் டோங்கிரியில் வசிக்கும் 27 வயது இளைஞரின் அறிமுகம் கிடைத்தது. 

2 பேரும் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு மணிக்கணக்கில் பேசி வந்தனர். இதனால் இளைஞரின் பேச்சி மயங்கினார் பெண் வைத்தியர் அடிக்கடி நேரில் சந்தித்து தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

அப்போது இளைஞர் பெண் வைத்தியருடன் தனிமையில் இருக்கும் படத்தை தனது செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளார். 

2 பேரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததில் கடந்த ஆண்டு இறுதியில் பெண் வைத்தியர் கர்ப்பமானார். இதுபற்றி பெண் வைத்தியர் இளைஞரிடம் கூறியபோது அவர் கருவை கலைக்க கூறியுள்ளார். 

இதற்கு பெண் வைத்தியர் மறுக்கவே, தன்னுடன் தனிமையில் இருக்கும் படத்தை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன அவர் கடந்த பெப்ரவரி மாதம் கருக்கலைப்பு செய்து கொண்டார். 

பின்னர் இளைஞர் பெண் வைத்தியருடன் பேசுவதையும். பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் சந்தேகமடைந்த பெண் வைத்தியர் விசாரித்ததில் இளைஞருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்திருப்பது தெரியவந்தது. 

இதனாலேயே அவர் தன்னுடன் பழகுவதை தவிர்த்து வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 

இதனை தொடர்ந்து அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

இந்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் இளைஞர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

title