Header Logo
Mogo Academy

கிழக்கு
போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது

Jun 25, 2025 - 11:07 AM -

0

போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது
Mobitel inner

நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த இளம்பெண் உட்பட மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நீண்ட நாட்களாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் தொடர்பில் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று (24) மாலை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் பெண் சந்தேக நபர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது விசேட அதிரடிப் படையினருடன் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொலிஸாரும் இணைந்து குறித்த இளம் பெண் உட்பட மூவரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கைதான 27, 32 வயதிற்குட்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப் பொருட்கள் ஒரு தொகுதி மீட்கப்பட்டதுடன் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் கைதான சந்தேக நபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara