Header Logo

கிழக்கு
சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்

Jun 26, 2025 - 01:00 PM -

0

சம்மாந்துறை  பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்  இப்றாலெப்பை முகம்மட் மாஹீரும், உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் வெள்ளையன் வினோகாந்தும் தெரிவாகினர்.

 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி தலைமையில் சபை மண்டபத்தில் இன்று (26) காலை   நடைபெற்றது.

 

புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 23 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர்.

 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 09 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் 05  உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு சார்பில் 03 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பில் 02 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சி சார்பில் 01 உறுப்பினரும், தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் 01 உறுப்பினரும் என  23  பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதன்போது  உள்ளூராட்சி ஆணையாளர்   புதிய தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார்.

 

இந்நிலையில் இருவர் புதிய தவிசாளர் தெரிவிற்காக சபையில் உறுப்பினர்களினால் பிரேரிக்கப்பட்டனர். இதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என சபையில் விடப்பட்டது. இதன் போது பெரும்பாலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பினை கோரினர்.

 

இதற்கமைய உறுப்பினர்களால் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்ட இரண்டு புதிய தவிசாளர் தெரிவு உறுப்பினர்களும் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய உறுப்பினர்களால் புதிய தவிசாளராக தெரிவு செய்ய கோரப்பட்டது.

 

இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளரை  சபையின் 23 உறுப்பினர்களில் தமிழ் அரசுக் கட்சி - 01, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 09, சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 02,  ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 02 உறுப்பினர்கள்,  உள்ளடங்கலாக  பிரதிநிதிகள் ஆதரித்தனர்.  

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய தவிசாளராக போட்டியிட்ட ஐ.எல்.எம். மாஹிர் என்பவர் 14 ஆசனங்களை பெற்று சம்மாந்துறை  பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவானார். எதிராக போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மற்றுமொரு தவிசாளர் வேட்பாளரான சாப்தீன் நளீம் என்பவர் 07 ஆசனங்களை பெற்ற நிலையில் 07 மேலதிக வாக்குகளால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  ஐ.எல்.எம். மாஹிர் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

 

இதன்போது நடைபெற்ற  தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பகிரங்க வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்  நடுநிலை வகித்தனர். மேலும் கூட்டத்தின் தொடர்ச்சியாக உப தவிசாளர் தெரிவு நடைபெற்றது.

 

3 பேர் புதிய உப தவிசாளர் தெரிவில் உள்வாங்கப்பட்ட நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட உறுப்பினர்  வெள்ளையன் வினோகாந் என்பருக்கு 12 வாக்குகளும், சுயேட்சைக்குழு உறுப்பினரான சுலைமாலெப்பை அப்துல் நஸார் என்பவருக்கு 07 வாக்ககளும், ஆனந்தம் சதானந்தம் என்பவருக்கு 2 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

 

இந்நிலையில்  ஐக்கிய மக்கள் சக்தி  சார்பில் முன்மொழியப்பட்ட உறுப்பினர்  வெள்ளையன் வினோகாந் 05 மேலதிக வாக்குகளை பெற்று உப தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன் அஷ்ரப் தாஹிர் மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

புதிய தவிசாளர் தெரிவினை முன்னிட்டு சம்மாந்தறை  பிரதேச சபையை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்தது.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title