பல்சுவை
30 ஆண்டுகளாக பெண் வயிற்றில் இருந்த சிசு!

Jun 28, 2025 - 05:17 PM -

0

30 ஆண்டுகளாக பெண் வயிற்றில் இருந்த சிசு!

அல்ஜீரியாவை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவரின் வயிற்றில், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சிசு ஒன்று, கால்சிய கல்லாக மாறியிருந்தது, மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

75 வயது மூதாட்டி ஒருவர் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், அந்த மூதாட்டிக்கு மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்த போதுதான், இந்த அரிய கண்டுபிடிப்பு வெளிப்பட்டுள்ளது. 

அவரது வயிற்றில், சுமார் 7 மாதம் வரை உயிருடன் இருந்து இறந்த சிசு ஒன்று, கல் போல் மாறியிருப்பதை கண்டறிந்தனர். 

கருப்பைக்கு வெளியே கர்ப்பம் தரித்து, இரத்த ஓட்டம் கிடைக்காததால் சிசு இறந்துள்ளது. 

உடல் தனது இயற்கையான பாதுகாப்பு சக்திகளை பயன்படுத்தி, இறந்த சிசுவை கால்சியமாக மாற்றி, கல் போல ஆக்கியுள்ளது. 

இதனால் தாயின் உடல்நிலை பாதிக்கப்படாமல் தடுக்கப்படுகிறது. இது உடலின் அற்புதமான தற்காப்பு முறையை வெளிப்படுத்தும் ஒரு சான்றாகும். 

இப்படிப்பட்ட நிகழ்வுகள் மிகவும் அரிதானவை. 2013ஆம் ஆண்டு கொலம்பியாவில் ஒரு மூதாட்டியின் வயிற்றில் 40 ஆண்டுகளாக இருந்த 'கல்லாய் மாறிய குழந்தை' கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05