Header Logo

பல்சுவை
சிலிண்டர் விலை குறைந்தது!

Jul 1, 2025 - 07:28 AM -

0

சிலிண்டர் விலை குறைந்தது!

இந்தியாவில் இன்று (01) முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 57.50 ரூபா குறைந்து 1823.50 ரூபாவாக விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை, 868.50 ரூபாவுக்கு விற்பனை தொடர்கிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 1 ஆம் திகதி இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு மார்ச் மாதம் மீண்டும் விலை உயர்ந்தது. பின்னர் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் விலை குறைந்தது.

இந்நிலையில், இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக குறைத்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நேற்று 1,881 ரூபா விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 57.50 ரூபா குறைக்கப்பட்டு 823.50 ரூபாவாக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

அதேநேரத்தில் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ஏறியதா? இறங்கியதா? என்பதை பார்ப்போம். அதாவது வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமின்றி 868.50 ரூபாவுக்கு  விற்பனையாகிறது.

MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!