Header Logo

பல்சுவை
பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார் கைது

Jul 2, 2025 - 09:48 AM -

0

பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார் கைது

இந்தியாவின் ராஜஸ்தானில் தாந்த்ரீகர் என்று கூறிக்கொண்டு வளம் போலி சாமியார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில், தாந்த்ரீகர் என்று கூறிக்கொண்டு வளம் வந்த பிரஹலாத் மேஹர் (41) என்பவர், சிறுமியை கடத்தி மூன்று நாட்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் தெரவிக்கையில்,

மேஹர், சிறுமியின் குடும்பத்திடம், அவளுக்கு ஏற்பட்ட துஷ்ட சக்திகளின் தாக்கத்தை நீக்க சடங்குகள் செய்வதாகவும், குடும்பக் கடன்களைத் தீர்க்க உதவுவதாகவும் உறுதியளித்து இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

ஜூன் 22 அன்று ராய்ப்பூர் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தனது ஆசிரமத்திற்கு அவர்களை அழைத்து அங்கு, இரவு வரை சிறுமிக்கு சடங்குகளைச் செய்வது போல் நடித்தார். அடுத்த நாள் ஜூன் 23 காலை சாமியாரும் சிறுமியும் அந்த இடத்திலிருந்து காணாமல் போயுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். கடந்த வாரம் ஜூன் 26 ஆம் திகதி அஜ்மீர் மாவட்டத்தில் சிறுமியை பொலிஸார் மீட்டனர். சிறுமி கடத்தப்பட்ட மூன்று நாட்களுக்கும் மேலாக சாமியாரால் தொடர் பாலியல் வன்கொடுமை செய்ப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. இதன்பின் சாமியார் திங்களன்று கைது செய்யப்பட்டார். போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் நேற்று (01) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title