Jul 3, 2025 - 09:56 AM -
0
இந்தியாவின் ராஜஸ்தானில் ஒரு குடும்பமே தண்ணீர் டேங்கில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பார்மர் மாவட்டத்தை சிறந்த சிவ்லால் மேக்வால் (35), அவரது மனைவி கவிதா (32), இளைய மகன் ராமதேவ் (8), மூத்த மகன் ஆகிய 4 பேர் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் டேங்கில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். புதன்கிழமை அதிகாலையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்கொலை செய்யும் முன்னர் கவிதா தனது இளைய மகன் ராமதேவ் (8) இற்கு பெண்களின் உடையை அணிவித்து, அவனது தலையில் துப்பட்டாவை போர்த்தி, அவன் கண்களில் காஜல் மை பூசி, தனது தங்க நகைகளை அவனுக்கு அணிவித்து அழகு பார்த்துள்ளார்.
வீட்டில் இருந்து சிவ்லால் எழுதிய தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் குடும்பத்தின் இந்த முடிவுக்கு காரணம் என்றும், அதில் சிவ்லாலின் இளைய சகோதரரும் ஒருவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலம் மற்றும் வீட்டின் உரிமை தொடர்பாக பல ஆண்டுகளாக நடந்த சண்டைகளே தற்கொலைக்குக் காரணம் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனி வீடு கட்ட சிவ்லால் விரும்பியதாகவும், இதற்கு அவரது தாயும் சகோதரரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கவிதாவின் மாமா கூறியுள்ளார்.
சம்பவத்தன்று குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் வெளியே இருந்த நிலையில், சிவ்லால் மற்றும் கவிதா தங்களது தொலைபேசிகளை அணைத்துவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளனர். பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.