Header Logo
SLIC
கிழக்கு
கடலரிப்பு அபாயம் தொடர்பில் உடனடி தீர்வு

Jul 3, 2025 - 02:13 PM

கடலரிப்பு அபாயம் தொடர்பில் உடனடி தீர்வு
Mobitel Inner 1278
EDEX Inner

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் வேண்டுகோளுக்கமைய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம கல்முனை கடற்கரைப்பகுதியில் ஏற்படும் கடலரிப்பு அபாயம் உள்ள இடங்களை நேற்று (02) நேரடி விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டு உடனடி தீர்வு வழங்கினார்.

 

குறித்த நிகழ்வில் அரசாங்க அதிபருடன் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் Groynes - கடற்கரை பாதுகாப்பு கல்லணை திட்ட கொந்தராத்துகாரர் உள்ளிட்ட தரப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

நிகழ்வில் நம்பிக்கையாளர் சபையினருடன் பிரதேச மீனவர்களும் இணைந்து கடலரிப்பு அபாயம் தொடர்பான கள நிலைமைகளை விளக்கினர்.

 

நிலைமையை ஆய்வு செய்த மாவட்ட அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், கொந்தராத்துகாரருக்கும் இடைநிறுத்தப்பட்ட Groynes திட்ட வேலைகளை உடனடியாக ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்குள் முடிக்க உத்தரவுகள் வழங்கினார்.

 

இதன்பிரகாரம் கடலோர பாதுகாப்பு கல்லணை திட்ட வேலைகள் நாளை (04) ஆரம்பிக்கப்படுவதற்கான உத்தரவாதம் கொந்தராத்துகாரர் தரப்பில் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278