பல்சுவை
மாமாவுடன் சேர கணவனைக் கொன்ற மனைவி

Jul 3, 2025 - 02:36 PM -

0

மாமாவுடன் சேர கணவனைக் கொன்ற மனைவி

தனது 55 வயது மாமாவை திருமணம் செய்ய கணவனைக் கொலை செய்த 20 வயது மனைவி. பீகார், அவுரங்கபாத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

55 வயது மாமா ஜீவனை திருமணம் செய்ய தனது கணவன் பிரியன்ஷாவை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார் குஞ்சா தேவி. இருவருக்கும் 45 நாள்களுக்கு முன்புதான் திருமணம் நடந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

குஞ்சா தேவி என்பவருக்கு திருமணத்திற்கு முன்பே தனது 55 வயது மாமா ஜீவன் என்பவருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது.

 

கணவன் பிரியன்ஷா ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Comments
0

MOST READ
01
02
03
04
05