Header Logo

பல்சுவை
16 வயது மாணவனிடம் அத்துமீறிய 40 வயது ஆசிரியை

Jul 3, 2025 - 03:23 PM -

0

16 வயது மாணவனிடம் அத்துமீறிய 40 வயது ஆசிரியை

16 வயது மாணவனை, 40 வயது ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் மகாராஷ்டிரா, மும்பையில் பிரபலமான தனியார் பாடசாலை ஒன்றில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு படிக்கும் 16 வயது மாணவரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கவனித்து கேட்டுள்ளனர்.

 

அப்போது ஆசிரியை ஒருவரால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.

 

அதன் அடிப்படையில் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் 40 வயது ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தொடர்ந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், 2023இல் பாடசாலை ஆண்டு விழா நடந்த போது பாதிக்கப்பட்ட மாணவனை, ஆசிரியை சந்தித்துள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகு, பாலியல் உறவு குறித்து தனது உணர்வுகளை மாணவனிடம் அந்த ஆசிரியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இதை கேட்டு தயங்கிய மாணவன், ஆசிரியரைத் தவிர்க்க தொடங்கினார். ஆனால், உறவை ஏற்றுக்கொள்ளும்படி, மாணவனின் பெண் தோழியிடம் ஆசிரியர் உதவி கேட்டுள்ளார். அதன்படி தோழி அந்த மாணவனை சம்மதிக்க வைத்துள்ளார்.

 

இதனையடுத்து மாணவனை விலை உயர்ந்த ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவனுக்கு அதிகளவில் பதற்றம் இருந்ததால், பதற்ற எதிர்ப்பு மாத்திரைகளை கொடுத்து ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.

 

இதன்பின் சிறுவன் பாடசாலையில் இருந்து வெளியேறியதினால் ஆசிரியர் அவனை விட்டுவிடுவார் என குடும்பத்தினர் எண்ணியுள்ளனர்.

 

இருப்பினும், சமீபத்தில் அந்த ஆசிரியர், வீட்டு ஊழியர்கள் மூலம் மாணவரை மீண்டும் தொடர்பு கொண்டு சந்திக்கும்படி கேட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது, மாணவரின் பெண் தோழி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


MOST READ

காணொளி
படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

title