Header Logo

பல்சுவை
யூடியூப் செனல்களின் வருவாய்க்கு ஆபத்து! ஜூலை 15 முதல் புதிய விதி!

Jul 5, 2025 - 04:07 PM -

0

யூடியூப் செனல்களின் வருவாய்க்கு ஆபத்து! ஜூலை 15 முதல் புதிய விதி!

வீடியோக்களை பதிவேற்றும் தளமான யூடியூப், தனது பல்வேறு விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. இதில், மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் மற்றும் பலரும் ஏற்கனவே போட்ட வீடியோக்களை போட்டு வருவாய் ஈட்டுவது இனி இயலாது என்று கூறப்படுகிறது. 

யூடியூப் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமானது ஜூலை 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. 

அதன்படி, மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் வீடியோக்கள், காப்பியடிக்கப்பட்ட வீடியோ அல்லது மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட வீடியோ போன்றவை, வருவாய் ஈட்டுவதற்கு தகுதியற்றதாக அறிவிக்கப்படவிருக்கிறது. 

அதாவது, அசல் உள்ளடக்கத்தை புதிதாக உருவாக்கும் படைப்பாளிகளுக்கு மட்டுமே வருவாய் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களின் வீடியோக்களுக்கு குறைந்த மதிப்பீடு வழங்கப்படும் என்றும் யூடியூப் தெரிவித்துள்ளது. 

பார்வையாளர்களுக்கு எந்த மதிப்பும் இல்லாத அல்லது மிகக் குறைந்த மதிப்பைக் கொண்டிருக்கும் வீடியோக்களுக்கு இனி வருவாய் கிடைக்காது. 

உண்மையான, புதிதாக உருவாக்கப்பட்ட வீடியோக்களுக்கு மட்டுமே யூடியூப் செனலில் வருவாய் ஈட்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று, அதன் பக்கத்தில் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது. 

கிளிக்பைட், தரம் குறைந்த வீடியோக்கள், மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் வீடியோக்களை பதிவிடுவோரின் ஆதிக்கத்தைக் குறைந்து, உண்மையிலேயே புதிது புதிதாக வீடியோக்களை உருவாக்குவோருக்கு வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், பொழுதுபோக்கு அல்லது கல்வி தொடர்பான வீடியோக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே மாதிரியான வீடியோக்களை பதிவேற்றுவது, ஒரே உள்ளடக்கம் கொண்ட வீடியோக்களை புதிதாக எடுத்து பதிவேற்றுவது, ஏஐ உருவாக்கிய படங்களைக் கொண்ட வீடியோக்கள் அல்லது வேறொருவர் உருவாக்கிய வீடியோக்களை மாற்றி பயன்படுத்துவது போன்றவற்றின் மூலம் இனி வருவாய் ஈட்ட முடியாது. 

இனி, கல்வி தொடர்பான வீடியோக்கள், பார்வையாளர்களுக்கு கற்றுக்கொடுப்பது தொடர்பான வீடியோக்கள், 

பொழுதுபோக்கு வீடியோக்கள், பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும் உள்ளடக்கத்தைக் கொண்டவை, 

அதிகாரப்பூர்வ குரல் மற்றும் வீடியோக்களைக் கொண்ட, வேறு எங்கிருந்தும் எடுக்கப்படாதவீடியோக்கள் மட்டுமே வருவாய் ஈட்ட முடியும். 

குறைந்தது 1000 பின்தொடர்வோரையும், கடந்த 12 மாதங்களில் 4000 பொதுமக்கள் பார்வை நேரத்தையும் கொண்ட யூடியூப் செனல்களுக்கு மட்டுமே இனி வருவாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்