பல்சுவை
இன்றைய Rate என்ன தெரியுமா?

Jul 7, 2025 - 03:59 PM -

0

இன்றைய Rate என்ன தெரியுமா?

இந்தியாவின் ஜூலை மாதம் தொடங்கியது முதல் ஏற்ற இறக்கங்களுடன் இருந்த தங்கம் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று (07) குறைந்துள்ளது நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்த ஆண்டு தொடங்கியது முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்து, கடந்த ஜூன் மாதத்தில் வரலாறு காணாத உச்சம் தொட்டது.

 

இதையடுத்து தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, ஜூலை மாதம் தொடங்கியது முதல் ஏற்ற இறக்கத்தை கண்டது.

 

கடந்த சனிக்கிழமை 05 ஆம் திகதி தங்கம் ஒரு கிராம் 9,060 ரூபாவிற்கும், ஒரு சவரன் 72,480 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, இன்று தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபா குறைந்து, ஒரு கிராம் 9,010 ரூபாவிற்கும், சவரனுக்கு 400 ரூபாவிற்கும் குறைந்து, ஒரு சவரன் 72,080 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு 40 ரூபா குறைந்து, ஒரு கிராம் 7,435 ரூபாவிற்கும், சவரனுக்கு 320 ரூபாவிற்கும் குறைந்து, ஒரு சவரன் 59,480 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலையில் மாற்றமேதுமின்றி, ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாவிற்கும், ஒரு கிலோ வெள்ளி 1,20,000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05