Jul 9, 2025 - 01:50 PM -
0
இந்தியாவின் டெல்லி - ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில், கான்வர் யாத்ரீகர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவுக்கு கடந்த 07 ஆம் திகதி இரவு உணவில் வெங்காயம் பரிமாறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புர்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஃபலௌடா புறவழிச்சாலை அருகே செயல்பட்டு வந்த ஒரு வீதியோர தாபாவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உணவில் வெங்காயம் கலந்திருந்ததால் ஆத்திரமடைந்த பக்தர்கள், கடை உரிமையாளருடன் வாக்குவாதம் செய்து, அங்கிருந்த மேசை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பக்தர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து எந்தப் புகாரும் பதிவு செய்யப்படாததால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.