Header Logo
Mogo Academy

கிழக்கு
அம்பாறையில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம்

Jul 10, 2025 - 12:26 PM -

0

அம்பாறையில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம்
Mobitel inner

அம்பாறையில் இம்முறை மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுபோகத்திற்கான நெல் அறுவடை மிக துரிதமாக நடைபெற்று வருவதாக அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 55,285 ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் மூலம் சுமார் 265,736 மெட்ரிக் டன் நெல் அறுவடையாக எதிர்பார்க்கப்படுவதுடன் இது தேசிய நெல் உற்பத்தியில் இம்மாவட்டம் 12.7 வீத பங்களிப்பை செய்து வருவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

நாட்டின் நெல் உற்பத்தி செய்யும் முதல் மூன்று மாவட்டங்களிலும் அம்பாறை மாவட்டமும் முதன்மை வகிக்கின்ற நிலையில், இம்முறை மேற்கொள்ளப்பட்ட நெல் உற்பத்தியில் கணிசமானவை 'சிவப்பு நாடு' இனத்தைச் சேர்ந்தவை ஆகும்.

 

நாவிதன்வெளி, அக்கரைப்பற்று, ஒலுவில், நிந்தவூர், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, போன்ற பிரதேசங்களில் தற்போது அறுவடை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் உலர வைக்காத நெல் ஒரு கிலோ 100 ரூபா முதல் 105 ரூபா வரை தனியார் நெல் வியாபாரிகளால் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara