Jul 11, 2025 - 11:04 AM -
0
மூத்த நடிகரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனலில், பிரபல நடிகர் கிங்காங்கின் மகள் கீர்த்தனாவின் திருமணம் குறித்து கருத்து வௌியிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அறுபடை முருகன் கோவிலில் குரு பூர்ணிமா நாளில் நடந்த இந்தத் திருமணம், மணமகன் நவீனின் குடும்பத்தினர் செலவில் பிரமாண்டமாக நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
திருமணத்தில் ஹெலிகாப்டரில் பூக்கள் தூவப்பட்டதாகவும், மிகப்பெரிய அளவில் சீர்வரிசை வழங்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களை ரங்கநாதன் விமர்சித்தார்.
அவர், கிங்காங் (சங்கர்) ஒரு கஷ்டஜீவி என்றும், சினிமா மற்றும் கச்சேரிகள் மூலம் உழைத்து முன்னேறியவர் என்றும் கூறினார். கிங்காங் 300இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தமிழ்நாடு முழுவதும் கிராமங்களில் நிகழ்ச்சிகள் நடத்தி புகழ் பெற்றவர்.
ஆனால், ஹெலிகாப்டர் மூலம் பூ தூவுதல், கிலோ கணக்கில் நகைகள் போன்ற மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று ரங்கநாதன் தெரிவித்தார்.
அவர், இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் வருமான வரித்துறையின் கவனத்தை ஈர்க்கலாம் என்று எச்சரித்தார். திருமணத்தில் சினிமா பிரபலங்கள் சிலர் மட்டுமே கலந்துகொண்டதாகவும், பெரிய நட்சத்திரங்கள் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மணமகன் வீட்டார் செலவில் நடந்த இந்தத் திருமணத்திற்கு, கிங்காங் எந்த செலவும் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ரங்கநாதன் வலியுறுத்தினார்.
கிங்காங்கின் உழைப்பையும் அவரது எளிமையான வாழ்க்கை முறையையும் பாராட்டிய அவர், மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.