பல்சுவை
முதல்முறையாக போராட்ட களத்தில் விஜய்

Jul 13, 2025 - 11:17 AM -

0

முதல்முறையாக போராட்ட களத்தில் விஜய்

அஜித்குமார் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசு, உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினார்.

 

இந்தியாவின் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளியான அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அஜித்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

 

இதையடுத்து அஜித்குமார் மரண வழக்கை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியது. இதனிடையே அஜித்குமார் மரண வழக்கை உயர்நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வலியுறுத்தியும், காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் தவெக சார்பில் விஜய் தலைமையில் இன்று (13) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், சென்னை சிவானந்தா வீதியில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது 'சாரி வேண்டாம்... நீதி வேண்டும்.' என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தமிழகத்தில் இந்த லாக்-அப் மரணங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05