பல்சுவை
7 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது

Jul 14, 2025 - 10:49 AM -

0

7 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (35), பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.

 

ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2023 ஆம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாய்னா அறிவித்தார்.

 

இதற்கிடையே, சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பருபுல்லி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தனர்.

 

இந்நிலையில், 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக சாய்னா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் செய்தியில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவுசெய்து பிரிகிறோம் என பதிவிட்டுள்ளார். பிரிவதற்கான காரணம் குறித்து சாய்னா எதுவும் தெரிவிக்கவில்லை.

Comments
0

MOST READ
01
02
03
04
05