பல்சுவை
குழந்தை பெற்றால் ரூபா 2 லட்சம் வழங்கப்படும்

Jul 21, 2025 - 10:20 AM -

0

குழந்தை பெற்றால் ரூபா 2 லட்சம் வழங்கப்படும்

இந்தியாவில் இந்துக்கள் 3 ஆவது குழந்தை பெற்றால் 1 லட்சமும் 4 ஆவது குழந்தை பெற்றால் ரூபா 2 லட்சமும் வழங்கப்படும் என்று ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார்.

 

ஓசூரில் நடைபெற்ற ஸ்ரீராம் சேனா அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிரமோத் முத்தாலி இவ்வாறு தெரிவித்தார்.

 

இக்கூட்டத்தில் பேசிய பிரமோத் முத்தாலிக்,

 

ஸ்ரீராம் சேனா அரசியல் செய்யாது. அனால் தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்பும். தமிழகத்தில் ஜிகாதி மற்றும் மதமாற்றம் அதிக அளவில் நடக்கிறது. அதற்கு திமுக அரசு ஆதரவு அளித்து வருகிறது என தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05