பல்சுவை
புஸ்சி ஆனந்த் பேச்சால் த.வெ.க.வினர் குழப்பம்

Jul 23, 2025 - 01:02 PM -

0

புஸ்சி ஆனந்த் பேச்சால் த.வெ.க.வினர் குழப்பம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் மாநில கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்றது.

 

அக்கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் மாண்புமிகு JV தளபதி' என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ஜோசப் விஜய் என்பதை தான் சுருக்கி JV என்று புஸ்சி ஆனந்த் கூறுகிறார். ஏற்கனவே அவர் கட்சி தொண்டர்களிடம் விஜய் என்ற பெயரையே கூறக்கூடாது தளபதி என்று தான் கூற வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

 

இப்போது ஜோசப் விஜய் என்பதை சுருக்கி JV என்று பேசியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05