Header Logo
Mogo Academy

கிழக்கு
இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம்

Jul 27, 2025 - 12:28 AM -

0

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம்
Mobitel inner

மட்டக்களப்பு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச நீதிப் பொறிமுறை கோரி, இன்று  (26) காந்தி பூங்காவில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கு சமூக இயக்கம், 'தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச நீதிப் பொறிமுறை கோரி' என்ற தொனிப்பொருளில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கப் பிரதிநிதிகள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்று திரண்டனர்.

இதன்போது, செம்மணி புதைகுழி இனப்படுகொலையின் சாட்சி மற்றும் சர்வதேச விசாரணை கோரி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கையொப்பப் பதிவு செய்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara