Header Logo
Mogo Academy

கிழக்கு
கொள்ளை சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் உயிரிழப்பு

Jul 30, 2025 - 04:37 PM -

0

கொள்ளை சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் உயிரிழப்பு
Mobitel inner

மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியைத் துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்து, அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிப பெண், சிகிச்சை பலனின்றி இன்று (30) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மட்டக்களப்பு நகர், நல்லையா வீதியைச் சேர்ந்த 81 வயதுடைய மகேஸ்வரி சரவணமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

கடந்த 24 ஆம் திகதி காலை 6.30 மணியளவில், குறித்த வயோதிப பெண் தனது வீட்டின் முன்புள்ள வீதியைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரது கழுத்தில் இருந்த சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்து எடுத்து, அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பியோடினர்.

 

இதனையடுத்து, வீதியில் வீழ்ந்து படுகாயமடைந்த அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

 

இச்சம்பவத்தை அடுத்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.

 

இதேவேளை, குறித்த கொள்ளையர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்ய பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara