Jul 31, 2025 - 04:13 PM -
0
இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த 34 வயது நபர், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், மணப்பெண்ணின் வயது 32 எனக் கூறி, போலி பாஸ்போர்ட் மூலம் ஏமாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மருத்துவ பரிசோதனையில், மனைவியின் வயது 42 - 45 ஆக இருக்கலாம் எனத் தெரியவந்ததோடு, இயற்கையாக குழந்தை பெற முடியாத நிலையும் உறுதியானது.
இதனால், கோபமடைந்த கணவர், மனைவி, மாமனார் உள்ளிட்ட எட்டு பேர் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருமணத்திற்கு முன், மணப்பெண்ணின் கல்வி மற்றும் வயது சான்றிதழ்களை மாப்பிள்ளை வீட்டார் கேட்டபோதும், அசல் ஆவணங்கள் வழங்கப்படவில்லை. திருமணத்தின் போதும், பாஸ்போர்ட் மற்றும் பாடசாலை சான்றிதழ்களின் நகல்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
திருமணப் பதிவு மற்றும் வங்கிப் பணிகளுக்காக அசல் ஆவணங்கள் கோரப்பட்டபோதும், அவை வழங்கப்படவில்லை. இதனால், மோசடி செய்யப்பட்டதாக உணர்ந்த மாப்பிள்ளை, பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். பொலிஸார், மணப்பெண் தரப்பு மீது விசாரணை தொடங்கியுள்ளனர்.
மனைவி தரப்பு, மோசடியை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தன்னை விட 10 வயது மூத்த பெண்ணுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக வாழ்ந்ததாக மாப்பிள்ளை அதிர்ச்சியடைந்துள்ளார்.

